கும்பகோணத்தில் தவெக நிர்வாகிகள் இருவர் சாலையை மறித்து வைத்த பேனரை அகற்றுமாறு கூறிய காவலரின் கையை உடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது – அரசு மீது வானதி சீனிவாசன் காட்டம்!!

சென்னை:
“கும்பகோணத்தில் தவெக நிர்வாகிகள் இருவர் சாலையை மறித்து வைத்த பேனரை அகற்றுமாறு கூறிய காவலரின் கையை உடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.

காவலர்கள் மீதே தாக்குதல் நிகழ்த்தும் அளவிற்கு தவெகவில் குண்டர்கள் உருவாகி வருவது இந்த ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு” என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கும்பகோணத்தில் தவெக நிர்வாகிகள் இருவர் சாலையை மறித்து வைத்த பேனரை அகற்றுமாறு கூறியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலரின் கையை உடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.

முன்பிருந்த ஆட்சியில் தமிழக மக்களுக்கும் குறிப்பாக பெண்க ளுக்கும் தான் பாதுகாப்பற்ற சூழல் நிலவியது.

ஆட்சி மாறினால் நிலைமை மாறிவிடும் என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் தவெக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கைக் காக்கும் காவலர்கள் மீதே தாக்குதல் நிகழ்த்தும் அளவுக்கு தவெகவில் குண்டர்கள் உருவாகி வருவது இந்த ஆட்சியிலும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு.

முன்பெல்லாம் காவல் துறையினரைக் கண்டோலே பயந்த காலம் போய் இன்று புதிதாக முளைக்கும் ரவுடிகளாலும், குண்டர்களாலும் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டிருப்பதுதான் வேதனை’ எனத் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *