”கோவையில் களைகட்டிய ஜனநாயகத் திருவிழா”……….

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர்,மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடி, கோவை அரசு கலைக்கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமார் பாடி, கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் எந்தவித தடங்களும் இன்றி வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா குறித்த கேள்விக்கு, கண்காணிப்பு குழு மூலமாக அனைத்து வங்கி பண பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஜி பே எனப்படும் டிஜிட்டல் பணம் பரிவர்த்தனையில், அதிகமாக பண பரிவர்த்தனை எந்த கணக்கில் இருந்து பகிரப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அர்ஜுன்சம்பத் கோவை தெற்கு தொகுதி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஒக்கிலியர் காலனி பகுதியில் எனது வாக்கை பதிவு செய்தேன். நமது நாட்டின் ஜனநாயகம் குறித்து பெருமிதம் கொள்கிறேன்.

பல்வேறு வாக்குச்சாவடியில் முதியோர்களுக்கு வீல் சேர் இருந்தும் அவர்களை அழைத்துச் செல்ல உறுப்பினர்கள் இல்லாததால் அனைத்து முதியவர்களும் தங்களது வாக்கினை பதிவு செய்ய சிரமம் மேற்கொண்டு வாக்குச்சாவடிக்கு வந்து செல்கின்றனர்.

கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில் உள்ள சேரன் மாநகர் அரசினர் நடுநிலைப் பள்ளியில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் ஜெயராம் எம்எல்ஏ அவர்கள் பாகம் எண் 387 இல் அமைக்க பெற்றுள்ள வாக்கு சாவடி மையத்தில் முதல் வாக்காக தனது வாக்கினை குடும்பத்தாருடன் சென்று பதிவு செய்தார்.

கோவை பாஜக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ஆறு மூக்கு பகுதியில் அமைந்துள்ள காமராஜர் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

கோவை சி.பி.ஐ.எம். – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் இன்று முட்டத்துவயல் பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *