இதுவரை 9 பேர் மட்டுமே வாக்களித்த ஏகனாபுரம் வாக்குச்சாவடியில் பரபரப்பு!!

ஏகனாபுரம் மக்கள் வாக்களிக்க மக்கள் வருவார்களா? என வாக்குச்சாவடியில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வகையில் ஏகனாபுரம் ஊர் மக்கள் 600 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர் .

ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்த நிலையில், ஏகனாபுரம் அரசு பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை.

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தாலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் ஏகனாபுரம் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் தற்போது வாக்களிக்க யாரும் வராமல் உள்ளனர்.

ஏகனாபுரம், நாகப்பட்டு ஆகிய இரு கிராமங்களில் 1400 வாக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. விமான பாதுகாப்பு குழு செயலாளர் எங்கள் பகுதியில் ஏகனாபுரம் மற்றும் நாகப்பட்டு பகுதியில் 1400க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், விமான நிலையம் வருவதை எதிர்த்து நாங்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என ஏற்கனவே தீர்மானம் செய்து உள்ளோம்.

ஒரு சில அரசு ஊழியர்கள் மட்டும் வாக்களித்துள்ளதாக கேள்விபட்டோம். கிராம மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள், என கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *