சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களித்த விஜய் !!

சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களித்தார் நடிகர் விஜய். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது .

21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்களும் , அரசியல் கட்சி பிரமுகர்களும் மிகுந்த ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.தமிழ்நாட்டில் காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 24.37%வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்கு சாவடியில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாக்களித்தார். விஜய்யின் வருகையால் அங்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது .

கடும் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் வருகை புரிந்த விஜய்யை அங்கிருந்த காவலர்கள் பத்திரமாக அழைத்து சென்று வாக்களிக்க செய்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *