” 2024 தேர்தல் முடிவுகள் சிலர் திருந்துவதற்கு வாய்ப்பாக அமையும்” – சசிகலா!!

மக்களவை தேர்தலையொட்டி சசிகலா தனது வாக்கினை செலுத்தினார்.

நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

விளவங்கோடு மற்றும் திரிபுரா மாநிலம் ராம்நகர் ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடத்தப்பட்டு வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் சசிகலா தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , 2024 தேர்தல் முடிவுகள் சிலர் திருந்துவதற்கு வாய்ப்பாக அமையும்.

அவர்கள் போட்டுள்ள தப்புக்கணக்கிற்கு முடிவு வரும். 2026 எங்களுடைய காலமாக இருக்கும்! என்று நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *