மக்களவை தேர்தலையொட்டி பகல் 1 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 40.05% வாக்குகள் பதிவு!!

மக்களவை தேர்தலையொட்டி பகல் 1 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது .

மக்களவை தேர்தலையொட்டி பகல் 1 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 44.08%, குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 32.31% வாக்குகள் பதிவாகியுள்ளன.

கள்ளக்குறிச்சியில் 44% ,நாமக்கல்லில் 43.66% ,ஆரணியில் 43.62 சதவீதம், கரூரில் 43.60 சதவீதம் ,பெரம்பலூரில் 43.32% ,சேலத்தில் 43.19 சதவீதம், விழுப்புரத்தில் 42.89% ,விருதுநகரில் 42.34% , ஈரோட்டில் 42.23%, சிதம்பரத்தில் 42.09% , திண்டுக்கல்லில் 41.97 சதவீதம், அரக்கோணத்தில் 41.92 சதவீதம், கிருஷ்ணகிரியில் 41.55 சதவீதம், திருவண்ணாமலையில் 41.46 சதவீதம் , நாகப்பட்டினத்தில் 41.43 சதவீதம், பொள்ளாச்சியில் 41.34% , வேலூரில் 41.24 சதவீதம், தேனியில் 41.24 சதவீதம், திருப்பூரில் 40.96 சதவீதம் , தஞ்சாவூரில் 40.81% , மயிலாடுதுறையில் 40.77 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

வடசென்னையில் 35.09 சதவீதமும், தென் சென்னையில் 33.93 சதவீதமும், மத்திய சென்னையில் 32.31% வாக்குகள் பதிவாகியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *