உள்ளாட்சித் தேர்தலில் 22,000 இளம் வேட்பாளர்களை களமிறக்க திட்டம்!!

சென்னை:
உள்​ளாட்​சித் தேர்​தலில் 22 ஆயிரம் இளம் வேட்​பாளர்​களை களமிறக்க அண்​ணா​மலை​யின் ‘வீ த லீடர்​ஸ்’ இயக்​கம் திட்​ட​மிட்​டுள்​ளது.

அண்​ணா​மலை​யின் இந்த வியூ​கம் தமிழகத்​தின் பாரம்​பரிய அரசி​யல் கட்​சிகளுக்​குப் புதிய சவாலாக அமை​யும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை, கடந்த ஜூன் 5-ம் தேதி சமூக ஊடக நேரலை மூலம் தனது புதிய அரசி​யல் இயக்​க​மான ‘வீ த லீடர்​ஸ்’ என்ற இயக்​கத்தை பிரகடனப்​படுத்​தி​னார்.

அப்​போது, அனை​வரை​யும் அரசி​யலுக்கு கொண்டு வரவும், அறம் சார்ந்த அரசி​யலை முன்​னெடுக்​க​வும் ஏது​வாக, கோவை​யில் ‘அப்​துல் கலாம்’ பெயரில் நவீன அரசி​யல் பயிற்சி மையம் ஒன்று தொடங்​கப்​படும் என்​றும், இந்த மையத்​தில் பயிற்சி பெறும் நபர்​கள், வரவிருக்​கும் உள்​ளாட்​சித் தேர்​தலில் வேட்​பாளர்​களாகக் களம் இறக்​கப்​படு​வார்​கள் எனவும் அண்​ணா​மலை அறி​வித்​தார்.

தற்​போது தொடங்​கப்​பட்​டுள்ள இந்த ‘வீ த லீடர்​ஸ்’, வரும் செப்​டம்​பர் மாதத்​தில் அதி​காரப்​பூர்வ அரசி​யல் கட்​சி​யாக உரு​வெடுக்​கும் எனத் தெரி​கிறது. இதற்​கான பெயர், சின்​னம் மற்​றும் கொடி வடிவ​மைப்​புப் பணி​களில் அண்​ணா​மலை தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளார்.

இந்​நிலை​யில், அண்​ணா​மலை​யோடு பாஜக​வின் முக்​கிய நிர்​வாகி​கள் பலரும் தங்​களது பதவி​களை ராஜி​னாமா செய்​து​விட்டு இந்த புதிய இயக்​கத்​தில் இணைந்து வரு​கின்​றனர்.

அந்​த வகை​யில், இயக்​கம் தொடங்​கப்​பட்ட 5 நாட்​களில் 17 லட்​சம் பேர் உறுப்​பினர்​களாக இணைந்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், அண்​ணா​மலை வெளி​யிட்​டுள்ள சில சுவாரசி​ய​மான புள்​ளி​விவரங்​கள் தமிழக அரசி​யலை உற்​று​நோக்க வைத்​துள்​ளன. அதாவது, ‘இந்த இயக்​கத்​தில் இணைந்​துள்ள 17 லட்​சம் பேரில் 25.2% பேர் ‘ஜென்​-ஸீ’ எனப்​படும் அடுத்த தலை​முறை இளைஞர்​கள் ஆவர்.

வரவிருக்​கும் உள்​ளாட்​சித் தேர்​தலில் களம் காண இந்த இயக்​கத்​தைச் சேர்ந்த 60,370 உறுப்​பினர்​கள் தங்​களை ஆயத்​தப்​படுத்​திக் கொண்​டுள்​ளனர்.

எனவே, போட்​டி​யிடத் தயா​ராக உள்ள இந்த 60,370 பேரில், 37.7% பேர் (அதாவது 22,760 பேர்) ‘ஜென்​-ஸீ’ இளைஞர்​கள்,’ என அண்ணாமலை தெரி​வித்​துஉள்​ளார்.

தவெக தலை​வர் விஜய், எவ்​வாறு ‘ஜென்​-ஸீ’ மற்​றும் இளம் வாக்​காளர்​களைக் குறி​வைத்​துத் தனது அரசி​யல் வியூ​கங்​களை அமைத்​தா​ரோ, அதே உத்​தியை அண்​ணா​மலை​யும் கையில் எடுத்​துள்​ளார்.

தமிழகம் முழு​வதும் உறுப்​பினர் சேர்க்​கை​யைத் தீவிரப்​படுத்தி வரும் ‘வீ த லீடர்​ஸ்’ இயக்​கம், வரும் உள்​ளாட்​சித் தேர்​தலில் 22 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இளம் வேட்​பாளர்​களைக் களமிறக்​கத் திட்​ட​மிட்​டிருப்​பது, தமிழகத்​தின் பாரம்​பரிய அரசி​யல் கட்​சிகளுக்​குப் புதிய சவாலாக அமை​யும்​ என அரசி​யல்​ நோக்​கர்​கள்​ தெரி​விக்​கின்​றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *