ஹெர்செகோவினாவுக்கு எதிராக 4-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது சுவிட்சர்லாந்து!!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்றைய போட்டியில் சுவிட்சர்லாந்து மற்றும் போஸ்னியா ஹெர்சொகோவினா அணிகள் மோதின.

லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் துவக்கம் முதலே கோல் அடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டின. எனினும், ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் போனது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியதும் இரு அணிகளும் வீரர்களை மாற்றி கோல் அடிக்க முனைப்பு காட்டினர்.

இதற்கு பலனளிக்கும் வகையில் ஆட்டத்தின் 74-ஆவது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி முதல் கோலை அடித்தது. சுவிட்சர்லாந்து அணியின் ஜோஹன் மன்சாம்பி தனது அணிக்கு கோல் கணக்கை தொடங்கினார்.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 84-ஆவது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் ரூபென் வர்காஸ் கோல் அடித்தார்.

இந்த கோல் அடிக்க ப்ரீல் எம்போலோ அசிஸ்ட் வழங்கினார். இதனால் சுவிட்சர்லாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பிறகு 90-ஆவது நிமிடத்தில் ஜோஹன் மான்சாம்பி மற்றொரு கோல் அடிக்க சுவிட்சர்லாந்து அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

சுவிட்சர்லாந்து அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில் போஸ்னியா ஹெர்செகோவினா அணி தனது முதல் கோலை அடித்தது.

இதைத் தொடர்ந்து கிரானிட் ஹாகா பெனால்டி முறையில் கோல் அடித்து அசத்தினார்.

இதனால் சுவிட்சர்லாந்து அணி 4-1 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இறுதியில் சுவிட்சர்லாந்து அணி 4- என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *