கோடை வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் ஆவின் மோர் விற்பனை அதிகரிப்பு!!

கோடை வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் ஆவின் மோர் விற்பனையானது அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக சுமார் 26 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

பால் மட்டுமின்றி தயிர், மோர், வெண்ணெய் , இனிப்பு வகைகள் உள்ளிட்டவையும் ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பாலகங்கள் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக சுமார் 27 ஒன்றியங்கள் வாயிலாக தமிழகம் முழுவதும் ஆவின் பொருட்கள் தயார் செய்யப்பட்டு வெற்றிகரமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக கோடை காலங்களில் தயிர் , லஸ்ஸி , ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்டவை அதிக அளவில் விற்பனையாகும். அதன்படி கோடை காலம் என்பதால் ஆவின் மோர் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. 200 மில்லி ஆவின் மோர் பாட்டில் 12 ரூபாய்க்கும், 200 மில்லி ஆவின் மோர் பாக்கெட் ரூபாய் 8க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் மோர் பாட்டில், மோர் பாக்கெட் தயாரித்து சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஒப்பிடும்போது இந்த ஆண்டு 25 சதவீதம் ஆவின் மோர் விற்பனை அதிகரித்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *