திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கடல் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்கு வருவதும் இயல்பாக உள்ளது.
இந்த நாட்களில் கடல் சுமார் 50அடியில் இருந்து 100 அடி தூரம் உள்வாங்கி காணப்படும் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரியும்.
ஆனால் கந்த சஷ்டி திருவிழா தொடங்கிய நாள் முதல் இன்று வரை திருச்செந்தூர் கடல் இயல்பு நிலையை விட சற்று கூடுதலாக சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் குறைவான பக்தர்களே புனித நீராடுகின்றனர்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று 4-வது நாளாக சீற்றம் காணப்பட்டது.
கடும் சீற்றத்துடன் சுமார் 10 அடி தூரம் வெளியே வந்து செல்கிறது. இதனால் பக்தர்கள் தயங்கியவாறு புனித நீராடி வருகின்றனர் இதனால் எப்போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடும் நேரத்தில் கடல் அலைகள் சீற்றத்தால் குறைவான பக்தர்கள் புனித நீராடுகின்றனர்.