முதலமைச்சர் விஜய்க்கு திருவள்ளுவர் சிலை பரிசளிப்பு… !!

கரூர்:

கரூரில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ‘கரூர் மக்கள் சந்திப்பு கூட்டம்’ அட்லஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் சுமார் 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சிக்கு வந்த முதலமைச்சர்  விஜய் காரில் சாலைமார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தார்.

நிகழ்ச்சிக்கு வந்த முதலமைச்சர் விஜயை அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், அருண் ராஜ், த.வெ.க. நிர்வாகிகள், விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சி மேடைக்கு வந்த முதலமைச்சர் விஜயை கண்டதும் தொண்டர்கள், ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதையடுத்து நிகழ்ச்சி தொடங்கியது.

முதலில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், முதலமைச்சர் விஜயை வரவேற்று பேசினார். இதையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

முதலமைச்சர் விஜய்க்கு திருவள்ளுவர் சிலையை பரிசளித்து பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதி சிறப்புரையாற்றினார்.

தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைத்து இரு மாதங்களான நிலையில் முதலமைச்சர் விஜய் முதல்முறையாக கரூர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *