சந்தானம் படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது!!

சின்னத்திரையில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் 2004-ஆம் ஆண்டு வெளியான மன்மதன் படத்தின் மூலம் நடிகர் சிம்புவால் பெரிய திரையில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து சச்சின், பொல்லாதவன், சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பலப்படங்களில் காமெடியில் கலக்கினார் சந்தானம். 2012-ஆம் ஆண்டு சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 2013-ல் கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் மூலம் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் ஆனார் சந்தானம்.

2014-ம் ஆண்டு ஸ்ரீநாத் இயக்கத்தில் வெளிவந்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் மூலம் முழுநேர கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் தொடர்ந்து ஹீரோவாகவே சந்தானம் நடித்து வருகிறார்.

சில படங்கள் வெற்றி பெற்றாலும், பல படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவில் வசூல் செய்யவில்லை. இவர் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து “இங்க நான் தான் கிங்கு” என்ற படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை ஆனந்த் நாராயண் இப்படத்தை இயக்கினார். எழிச்சுர் அரவிந்தன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

கோபுரம் பிலிம் புரொடக்ஷன் இந்த படத்தை தயாரித்துள்ளது. மனோபாலா, தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் இதில் நடித்து உள்ளனர். பிரியாலயா இப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார். டி இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்கை’ கமல்ஹாசன் கடந்த மாதம் வெளியிட்ட நிலையில், படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. அடுத்த மாதம் 10-ந்தேதி இப்படம் தியேட்டர்களில் ‘ரிலீஸ்’ செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *