ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான போட்டி; தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!!

ஜோகன்னஸ் பர்க்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இம்​மாத இறுதி​யில் தென் ஆப்பிரிக்கா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஒருநாள் போட்​டி, 3 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. இதில் ஒரு​நாள் போட்​டித் தொடரின் ஆட்டங்கள் வரும் 24, 27 மற்​றும் 30-ம் தேதி​களில் நடைபெறுகின்றன.

இந்த தொடருக்​கான தென் ஆப்​பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்​டன் தெம்பா பவுமா அணிக்கு திரும்பி உள்​ளார்.

அனுபவம் வாய்ந்த குயிண்​டன் டி காக், டேவிட் மில்​லர் ஆகியோ​ரும் இடம் பெற்​றுள்​ளனர். காயம் காரண​மாக வேகப்​பந்து வீச்​சாள​ரான காகிசோ ரபாடா இடம் பெற​வில்​லை.

அவருக்கு பதிலாக ஜெரால்டு கோட்ஸி சேர்க்​கப்​பட்​டுள்​ளார்.

தென் ஆப்​பிரிக்க அணி விவரம்: தெம்பா பவுமா (கேப்​டன்), எய்டன் மார்க்​ரம், ரியான் ரிக்​கெல்​டன், குயின்​டன் டி காக், டிரிஸ்டன் ஸ்டப்​ஸ், டேவிட் மில்​லர், டோனி டி ஜோர்​ஜி, மார்கோயான்​சன், கார்​பின் போஷ், மேத்யூ ப்ரீட்​ஸ்​கே, ஜெரால்ட் கோட்​ஸி, ஓட்​னீல் பார்ட்​மேன், ஜார்ன் ஃபோர்​டு​யின், கேசவ் மகராஜ், க்வே​னா மபா​கா, லுங்​கி நிகிடி.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *