துபாய்:
மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
இதில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது.
இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.
அப்போது பாத்திமா சனா, ஷபாலி வர்மாவை பெவிலியனை நோக்கி செல்லுமாறு சைகைகளை காட்டினார். இது ஐசிசி நடத்தை விதிமுறைகளை மீறிய செயலாகும்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய ஐசிசி, பாத்திமா சனாவுக்கு போட்டியின் ஊதியத்தில் 10 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது. மேலும் ஒரு தகுதியிழப்பு புள்ளியையும் வழங்கி உள்ளது.