அயோத்தியில் ராமர் கோவில் 22ஆம் தேதி கோவில் திறக்கப்பட்ட நிலையில் 23ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆரம்பத்தில் பக்தர்களின் வசதிக்காக அரசியல் தலைவர்கள் குறிப்பாக பாஜக நிர்வாகிகள் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல வேண்டாம் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
அதன் அடிப்படையில் பாஜக நிர்வாகிகள் யாரும் ராமர் கோவிலுக்கு செல்லாமல் இருந்தனர் தற்போது நான்கு மாதங்கள் கடந்துள்ள நிலையில் ராமர் கோவிலுக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் சென்று வருகின்றனர் .
கடந்த புதன்கிழமை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்தார். இந்நிலையில் தமிழக ஆளுநரான ஆர் என் ரவி தனது மனைவியுடன் அயோத்தி ராமர் கோயிலில் நேற்று வழிபாடு செய்தார்.
தொடர்ந்து பேசிய அவர் 500 ஆண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது என்றும் பக்தியை வெளிப்படுத்தவே ராமர் கோயிலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். ராமர் கோயில் நமது நம்பிக்கையின் அடையாளம் என்றும் ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்தார்.