இங்கிலாந்தின் அதிக எடை கொண்டவர்களில் ஒருவரான ஜேசன் ஹோல்டன் காலமானார்..!

இங்கிலாந்தின் அதிக எடை கொண்டவர்களில் ஒருவரான ஜேசன் ஹோல்டன் (33) காலமானார். உடல் உறுப்புகள் செயலிழந்ததாலும், உடல் பருமன் காரணமாகவும் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரை காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் பலனில்லை.

பிரித்தானியா பகுதியில் ஜேசன் ஹோல்டன்(Jason Holton)அவர் தனது 34 வது பிறந்தநாளிற்கு ஒரு வாரம் முன்பாக மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.அவர் இறந்தபோது அவரின் உடல் எடை 317.51 கிலோ.

இறப்பதற்கு முன்பாக அவருக்கு சிறுநீரக டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து செயலிழந்து வந்த நிலையில், அவர் மரணம் அடைந்துள்ளார்.

கடந்த 2015இல் பிரித்தானியாவிலேயே ஜேசன் தான் உடல் பருமன் அதிகமாகக் கொண்ட நபராக இருந்துள்ளார். 2020ல் அவருடைய உறுப்புகள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து செயலிழக்க துவங்கியது. அப்போது கிரேன் மூலமாக அவருடைய வீட்டில் இருந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, அவரால் நடக்க முடியாமல் போனதும் அவர் மருத்துவமனை குடியிருப்பு ஒன்றில் இருந்து தனது மரணம் வரை வாழ்ந்துள்ளார்.

ஹோல்டனின் தாய் லிசா, தனது மகன் இறந்த செய்தியை உள்ளூர் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *