தமிழகத்தில் மின் கொள் முதலில் ரூ.1 லட்சம் கோடி ஊழல் நடைபெற்ற தாக பழனிசாமி கூறுவது ஆதாரமற்றது – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!!

சென்னை:
‘தமிழகத்தில் மின் கொள்முதலில் ரூ.1 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றதாக பழனிசாமி கூறுவது ஆதாரமற்றது’ என்று மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் களிடம் நேற்று அவர் கூறிய தாவது:

தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைகளின்போது பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க குறுகியகால டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.

நீண்டகால டெண்டர்கள் மூலம் மின்சாரம் கிடைக்க அடுத்த ஆண்டு மார்ச் மாதமாகிவிடும். அதுவரை சமாளிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் தினமும் ரூ.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை கூடுதல் செலவாகும்.

தொழில்துறை பாதிக்கப்படும் தேசிய அளவில் அனல் மின்சாரத்துக்கு நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. நாப்தா விலை அதிகம் என்பதால் தற்போது கிடைக்கும் எரிவாயு மின்சாரத்தை கொள்முதல் செய்கிறோம்.

மகாராஷ்டிரா, கர்நாடகம் போன்ற மாநிலங்கள் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்காததால் அங்கு மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள் ளது.

தினமும் 3 மணி நேர மின் வெட்டு ஏற்பட்டால்கூட தொழில் துறைக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.

தமிழகத்தில் அத்தகைய பாதிப்பைத் தவிர்க்கவே கூடுதல் செலவில் மின்சாரம் வாங்கப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட உப்பூர் அனல் மின் திட்டத்தில் ரூ.6 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டும், பின்னர் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

அதை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. இதற்கான திட்ட அறிக்கை ஒரு மாதத்தில் தயாராகும்.

உடன்குடி மின் திட்டத்தின் 2, 3-வது நிலைகளில் அமைக்க திட்டமிடப்பட்ட மின் உற்பத்தி அலகுகளின் திறனை 800 மெகாவாட்டாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

காற்றாலை, சூரிய ஒளி மின் உற்பத்திக்கான அனுமதிகளில் முறைகேடுகளைத் தடுக்கவே கடந்த 4 மாதங்களாக புதிய அனுமதிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் பேட்டரி சேமிப்புக் கொள்கை, புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் வெளிப்படை யான முறையில் அனுமதி வழங்கப்படும்.

பழனிசாமிக்கு நோட்டீஸ் மின் கொள்முதலில் ரூ.1 லட்சம் கோடி ஊழல் நடந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறுவது ஆதாரமற்றது.

மத்திய அரசு நிறுவனத் திடம் இருந்து மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை மட்டுமே மின்சாரம் வாங்கப்படும் நிலையில் ஊழல் எப்படி நடைபெறும்.

பழனிசாமி மீது சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *