கலாம் பிறந்தநாள் விழா: வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசுகளை வழங்கிய சார் ஆட்சியர் ராகுல் குமார்!!

தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சார் ஆட்சியர் ராகுல் குமார் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். மாணவி நந்தனா வரவேற்றார். பேச்சுப் போட்டியில் ஹாசினி, நவீன், ரித்திகா, கவிதைப் போட்டியில் பிரணவி, சர்வேஸ்வரன், விஜய கண்ணன், ஆகாஷ், நிகில், சுஜன், பொன்மொழிப் போட்டியில் ருத்ரேஸ்வரன், நித்திஷா, ஏஞ்சல், மாலினி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய சார் ஆட்சியர் ராகுல் குமார் சிறப்புரையாற்றினார். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

விழா ஏற்பாடுகளை ஆசிரியைகள் சிவரஞ்சனி, ஆர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *