இமாச்சலப் பிரதேசம், மண்டி தொகுதி பாஜக வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கங்கனா தன்னை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்.
நேற்று கங்கனா மண்டி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “நான் ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி, மணிப்பூர் என நாடு முழுவதும் எங்கு சென்றாலும் எனக்கு வியப்புதான். ஏனெனில், அந்த அளவுக்கு மக்கள் என்மீது அன்பு பொழிந்து வருகின்றனர்.
நடிகர் அமிதாப் பச்சனுக்குப் பிறகு, இந்தத் துறையில் யாருக்காவது இவ்வளவு அன்பும் மரியாதையும் கிடைக்கிறது என்றால், அது எனக்குத்தான். இதை என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்” என்று பேசியுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கங்கனாவை கலாய்த்து வருகின்றனர்.