10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் 97.31% பேர் தேர்ச்சி பெற்று முதலிடம்!!

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாவட்ட ரீதியாக தேர்ச்சி சதவிகிதம் வெளியாகியுள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதி வெளியான நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்தப் பொதுத்தேர்வை சுமார் 8 லட்சத்து 94 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ என்ற இணையதளங்களுக்கு சென்று மாணவ-மாணவிகள் தங்களுடைய பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு 0.16% கூடுதலான தேர்ச்சி விகிதம் ஆகும். வழக்கம் போல, மாணவர்களை விட மாணவிகள் 5.95 சதவீதம் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

1,364 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப்பள்ளிகள் 87.90 சதவீதமும், அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 91.77 சதவீதமும், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 97.43 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளன. தேர்வெழுதிய சிறைவாசிகளில் 260 பேரில் தேர்ச்சி பெற்றவர்கள் 228 பேர் ஆகும்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் 97.31% பேர் தேர்ச்சி பெற்று முதலிடம். வேலூர் மாவட்டத்தில் தான் குறைந்தபட்சமாக 82.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம்

அரியலூர் – 97.31%


சிவகங்கை – 97.02%


ராமநாதபுரம் 96.36%


கன்னியாகுமரி – 96.24%


திருச்சி – 95.23%


விருதுநகர் -95.14%


ஈரோடு -95.08%


பெரம்பலூங்ர் – 94.77%


தூத்துக்குடி – 94.39%


விழுப்புரம் – 94.11%

மதுரை – 94.07%


கோயம்புத்தூர் – 94.01%


கரூர் – 93.59%


நாமக்கல் – 93.51%


தஞ்சாவூர் – 93.40%

நெல்லை – 93.04%


தென்காசி – 92.69%


தேனி – 92.63%


கடலூர் – 92.63%


திருவாரூர் – 92.49%

திருப்பூர் – 92.38%

திண்டுக்கல் – 92.32%


புதுக்கோட்டை – 91.84%


சேலம் – 91.75%


கிருஷ்ணகிரி – 91.43%


நீலகிரி – 90.61%


மயிலாடுதுறை – 90.48%


தருமபுரி – 90.45%


நாகை – 89.70%


சென்னை – 88.21%

திருப்பத்தூர் 88.20%


காஞ்சிபுரம் – 87.55%


செங்கல்பட்டு – 97.38%


கள்ளக்குறிச்சி – 86.83%


திருவள்ளூர் – 86.52%


திருவண்ணாமலை – 86.10%


ராணிப்பேட்டை – 85.48%


வேலூர் – 82.07%

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *