பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது; பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும்! இந்தியா வெல்லும் – முதல்வர் ஸ்டாலின்!!

பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது; பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும்! இந்தியா வெல்லும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பேட்டி தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெற்றி முகத்தை நோக்கி I.N.D.I.A கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரையை பேசி வருகிறார் பிரதமர் மோடி

பிரதமரின் பொறுப்பற்ற பேச்சுகளையும் – அதனைத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் அமைதியையும் நாட்டு மக்கள் அதிர்ச்சியோடும் வேதனையோடும் பார்த்து வருகிறார்கள்

மதவெறுப்புப் பரப்புரை கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் கையில் எடுத்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மக்களைத் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலத் தலைவர்கள் அவதூறாகப் பேசுவதாகத் தன்னுடைய கற்பனைக் கதைகளை – பொய் மூட்டைகளைக் கட்டவிழ்க்கத் தொடங்கியுள்ளார்

பிரதமர் பேசுவதைக் கவனித்தால் “உண்மை கிலோ என்ன விலை?” என்று கேட்பார் என தோன்றுகிறது

பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது; பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும்! இந்தியா வெல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *