”இந்தியன் 2 ” முதல் பாடல் மே 22 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்ட படக்குழுவினர் !!

28 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் . ‘இந்தியன் 2 ‘ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்தியன் இரண்டாம் பாகத்தை குறித்து சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடல் மே 22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் குதிரையில் சில் அவுட் ஷாட்டில் கமல்ஹாசன் வருகிறார்.

இந்த அறிக்கையினால் ரசிகர்கள் மிகவும் கொண்டாடத்தில் இருக்கின்றனர். படத்தின் முதல் பாகம் போலவே இப்படமும் வெற்றிப்பெரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதைதொடர்ந்து படத்தின் மூன்றாம் பாகமும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *