கடந்த ஆண்டு லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தெ கிரேட்ட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இது விஜய் நடிக்கும் 68-வது படமாகும். கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்தில், சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் மிகவும் வைரலாகியது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் படக்குழுவினர் அமெரிக்காவில் VFX பணிக்காக சென்றனர். நேற்று பணிகள் நிறைவடைந்தது என வெங்கட் பிரபு அவரது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டார்.
இதனிடையே அரசியலில் குதித்த விஜய் இறுதியாக 69-வது படத்தில் நடித்துவிட்டு சினிமாவிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.

இதனால், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், விஜய் நடிக்கும் 69-வது படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் சூர்யாவுடன் இணைந்து சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்து தேசிய விருது வென்றவர் ஆவார். இதுக் குறித்த் ஆதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.