கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ கார்த்திக் சுப்புராஜ் பேட்டி

சென்னை,
கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ரகசியம்கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்த ’பெண்குயின்’ திரைப்படம் வரும் 19ம் தேதி அமேசான் ப்ரைம் டைமில் வெளியாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பொதுவாக கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே கிளைமாக்சில் ஒரு வித்தியாசமான டுவிஸ்ட் இருக்கும். அதே போல் அவர் தயாரித்து இருக்கும் இந்தப் படத்திலும் ஒரு வித்தியாசமான டுவிஸ்ட் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் அளித்த பேட்டியில் இதுகுறித்து கூறியதாவது:

இந்த படத்தில் வரும் மாஸ்க் அணிந்த வில்லன் யார் என்பதே படக்குழுவினர்களுக்கு தெரியாது. அதாவது நாயகி கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர்கள் டீமை தவிர வேறு யாருக்கும் தெரியாத வகையில் இந்த உண்மையை நாங்கள் ரகசியமாக வைத்திருந்தோம். அந்த மாஸ்க் வில்லன் யார் என்பதை கிளைமாக்ஸில் நீங்கள் திரையில் பார்க்கும்போது நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள். அந்த கேரக்டர் அந்த அளவுக்கு ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் அளித்த இந்த பேட்டியிலிருந்து அந்த மாஸ்க் மனிதன் அனேகமாக ஒரு பிரபலமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வரும் 19ம் தேதி வரை அந்த பிரபலம் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்