‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டம் – டெல்லி புறப்பட்ட மு.க. ஸ்டாலின்!!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது.

இதில், பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் 292 இடங்களில் இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் மற்ற கட்சிகள் 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதன்படி டெல்லி, குஜராத், ஒடிசா, மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், என கைப்பற்றினாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு இந்தியா கூட்டணி அதிர்ச்சி கொடுத்தது.

இதனால், மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஆகையால், இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாக்கின.

ஆனால், நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு தங்களின் ஆதரவு பாஜகவுக்கு தான் என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

இந்நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளநிலையில், அதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.

அவர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *