கடுமையாக உழைத்ததால்தான் தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளது – நரேந்திர மோடி!!

NDA கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசும் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை குறை கூறிய எதிர்க்கட்சிகள் இப்போது எங்கே?; மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து இப்போது ஒருவரும் வாய் திறக்கவில்லை; ஜனநாயகத்தின் மாண்பைக் குறைக்கவே ஈவிஎம் பிரச்னையை எதிர்க்கட்சிகள் எழுப்பின. சர்வதேச அளவில் இந்தியாவின் பிம்பத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன.

கடுமையாக உழைத்ததால்தான் தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளது; தமிழ்நாட்டில் வருங்காலத்திலும் பாஜகவின் வளர்ச்சி அபரிவிதமாக இருக்கும்; கடுமையான உழைப்பால் கேரளாவில் கால்பதித்துள்ளோம் ஜெகந்நாதர் அருளால் அடுத்த 50 ஆண்டுகளுக்கும் ஒடிஷாவில் பாஜக ஆட்சி தொடரும்.

காங்கிரசை விட அதிகமான இடங்களை மூன்றாவது முறையாக பாஜக பெற்றுள்ளது; ஜெயித்தாலும், தோற்றாலும் பாஜக ஒரே மாதிரிதான் நடந்துகொள்ளும்; முற்றிலும் ஒருங்கிணைந்த கூட்டாட்சி என்பதே எங்கள் குறிக்கோள்; இந்தியா கூட்டணி இப்போதும் பிளவுபட்ட வீடாகவே உள்ளது .எதிரணியில் இருந்து மக்களவைக்கு தேர்வாகியுள்ள எம்.பிக்களுக்கு வாழ்த்துகள் என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *