குவைத் நாட்டில் மங்காப் நகரில் ஜூன் 12ஆம் தேதி தொழிலாளர்கள் தங்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.
இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் திரு. ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் குவைத்தில் நடந்த பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராம கருப்பண்ணன், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வீராசாமி மாரியப்பன், கடலூரை சேர்ந்த சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஷரீப் , தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த புனாப் ரிச்சர்ட் ராய் , திருச்சி மாவட்டத்தை சேர்ந்த எபமேசன் ராஜு மற்றும் சென்னையை சேர்ந்த கோவிந்தன் சிவசங்கர் ஆகியோர் உயிரிழந்தனர்.