கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி சேலம் அரசு மருத்துவமனை விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்களில் 3 பேர் இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் ஆகியோருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.