அதிமுக உண்ணாவிரதத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் ஆதரவு !!

அதிமுக உண்ணாவிரதத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் ஆதரவு தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை யை நடக்க விடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து சென்னை ராஜரத்தினம் மைதானம் முன்பு அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாகவும், சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களை பேச அனுமதிக்காததை கண்டித்தும், நடப்பு கூட்டத்தொடர் முழுமைக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்துள்ளதை கண்டித்தும் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சட்டப்பேரவை சஸ்பெண்ட் விவகாரம் தொடர்பாக, சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் அதிமுக எம்எல்ஏக்களை, நேரில் சந்தித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு தெரிவித்து வருகிறார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *