நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் வழங்க வேண்டும் – ஜி.கே வாசன் வலியுறுத்தல்!!

நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இஇதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்கள் குடும்ப அட்டையின் மூலம் பொது விநியோக திட்டத்தில் “நியாயவிலைக் கடை”களில் குறைந்த விலையில் உணவு பொருள்களை வாங்குகிறார்கள். அவர்களுக்கு பயனுள்ள பொருள்களை வழங்குவது அரசின் கடமை. பொது விநியோக திட்டத்தின் மூலம் நியாயவிலைக் கடைகளில் அரசி, பருப்பு, எண்ணெய் வழங்கப்படுகிறது. இதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் வழங்கப்படுகிறது.

இந்த பாமாயில் அயல்நாடுகளில் இருந்து பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் உள்ளாட்டில் உற்பத்தி செய்யப்படும், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் வழங்கினால் உள்நாட்டில் உள்ள சிறு, குறு எண்ணெய் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள். உள்ளநாட்டு வருமானமும் உயரும். தேங்காய் எண்ணைய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் சமையலில் பயன்படுத்தும் போது பல்வேறு பயன்கள் உள்ளன. இதனால் பல்வேறு உடல்நோய்கள் தடுக்கப்படுகிறது, கட்டுக்கள் கொண்டு வரப்படுகிறது.

ஆகவே நியாயவிலைக் கடைகளில் பாமாயில் வினியோகிப்பதை நிறுத்திவிட்டு உடல் ஆரோக்யத்தை தரும் உள்ளநாட்டில் உற்பத்தியாகும் எண்ணெய்களை வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *