யூரோ கோப்பை வென்ற 17 வயது வீரர் நெகிழ்ச்சி!!

உலகின் அதிக பிரபலமான கால்பந்து தொடர் யூரோ கோப்பை. 2024 யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது.

இந்த போட்டியில் ஸ்பெயின் அணி நான்காவது முறையாக யூரோ கோப்பையை வென்று சாதனை படைத்தது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இதுவரை எந்த அணியும் நான்கு முறை கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடைபெற்று முடிந்த யூரோ கோப்பை 2024 தொடர் ஸ்பெயின் அணியின் லமின் யமால் என்ற இளம் வீரருக்கு அற்புதமான நினைவுகளை பரிசாக கொடுத்துள்ளது.

இந்த தொடரில் வைத்து தான் லமின் யமால் இளம் வயதில் கோல் அடித்த அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதன் மூலம் பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சாதனையை யமால் முந்தினார்.

16 ஆண்டுகள் 362 ஆவது நாளில் ஸ்பெயின் வீரர் லமின் யமால் தனது அணிக்காக கோல் அடித்தார். இதன் மூலம் அவர் உலகின் பார்வையை தன்பக்கம் திருப்பினார்.

உலகிலேயே இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்த லமின் யமால், இறுதிப் போட்டியில் தனது அணி கோல் அடிக்க அசிஸ்ட் செய்து அசத்தினார்.

ஜூலை 13 ஆம் தேதி 17 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய லமின் யமால் மறுநாளே தனது அணி நான்காவது முறை யூரோ கோப்பையை வெல்ல காரணமாக செயல்பட்டார். நேற்று நள்ளிரவு நடைபெற்ற யூரோ கோப்பை 2024 இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

தனது அணி கோப்பை வென்றது குறித்து பேசிய இளம் வீரர் லமின் யமால், “நான் இதைவிட சிறப்பான பிறந்தநாள் பரிசை எதிர்பார்க்க முடியாது. இது கனவு நனவான தருணம்.

அவர்கள் கோல் அடித்து போட்டி சமனில் இருந்த போது, கடினமாக இருந்தது. இந்த அணி எப்படி உருவாக்கப்பட்டது என்றே தெரியவில்லை, இது மீண்டும் மீண்டும் போராடும்,” என்று தெரிவித்தார்.

போட்டிக்கு பிந்தைய கொண்டாட்டங்களைத் தொடர்ந்து லமின் யமால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “இன்று கால்பந்து வெற்றி பெற்றது” என தலைப்பிட்டு கூடவே “கோட்” எமோஜி மற்றும் யூரோ கோப்பையுன் இருக்கும் தனது புகைப்படம், கோபா அமெரிக்கா கோப்பையுடன் மெஸ்ஸி இருக்கும் புகைப்படத்தை இணைத்துள்ளார்.

ஓரே இரவில் யூரோ கோப்பை மற்றும் கோபா அமெரிக்கா தொடர்களின் இறுதிப் போட்டி நடைபெற்றது.

முதலில் யூரோ கோப்பை போட்டி முடிந்த நிலையில், இரண்டாவதாக நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியனம் பட்டம் வென்றது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *