அளவு கடந்த சோதனை மற்றும் வெற்றியை பார்த்தது அ.தி.மு.க. தான் – எடப்பாடி பழனிசாமி பொதுக் குழுவில் பேச்சு!!

அளவு கடந்த சோதனை மற்றும் வெற்றியை பார்த்தது அ.தி.மு.க. தான் – எடப்பாடி பழனிசாமி பொதுக் குழுவில் பேச்சு!!

சென்னை:
சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

  • மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சி அ.தி.மு.க.
  • உயிரோட்டம் உள்ள அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது.
  • எதிரிகள் அஞ்சும் அளவுக்கு மதுரை மாநாட்டை நடத்தியது அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த கருத்தோடு பணியாற்றியதால் தான் மாநாடு வெற்றி பெற்றதற்கு காரணம்.
  • அளவு கடந்த சோதனை மற்றும் வெற்றியை பார்த்தது அ.தி.மு.க. தான்.
  • கணக்கு தெரியாத அளவுக்கு அ.தி.மு.க.வினர் மீது வழக்குகள் பாய்கிறது.
  • எதிரிகளை சட்ட நுணுக்கத்தோடு கையாள வேண்டும்.
  • கைகோர்த்து செயல்பட்ட எதிரிகள், துரோகிகளை வென்று காட்டியது அ.தி.மு.க
  • அ.தி.மு.க. இனி ஜெட் வேகத்தில் செயல்படும்.
  • கொரோனா தொற்று காலத்திலும் சிறப்பாக செயல்பட்டது அ.தி.மு.க.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply