”நம்பிக்கையான ஒரு தலைவராக இழந்துவிட்டது” – நடிகர் சிவகுமார் இரங்கல்!

”நம்பிக்கையான ஒரு தலைவராக இழந்துவிட்டது” – நடிகர் சிவகுமார் இரங்கல்!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவையொட்டி நடிகர் சிவக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார், அவருக்கு வயது 71. பல ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் சிகிச்சை தரப்படுவதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டது. இந்த சூழலில் விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார்.

விஜயகாந்தின் மரணச் செய்தியை அறிந்த தேமுதிக தொண்டர்களும் அவரின் ரசிகர்களும் கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளனர்.

இதுதொடர்பாக நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “தமிழக அரசியலில் எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையான ஒரு தலைவராக உருவாகிக் கொண்டருந்தவர். லாட்ஜில் உள்ள தன் அறையில் நண்பர்களை தங்கவிட்டு படப்பிடிப்பு முடிந்து வந்த வெராண்டாவில் படுத்துக்கொள்வார்.

புதுயுகம்’ – படத்தில் என் உயிர் நண்பனாக நடித்தார். கலையுலகம், அரசியல் உலகம் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது. சூர்யா, கார்த்தியுடன் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply