அநீதியைத் தட்டிக் கேட்கும், நல்லவராகவே வாழ்ந்தவர்‌ கேப்டன்‌ விஜயகாந்த் – அமீர் புகழஞ்சலி!!

அநீதியைத் தட்டிக் கேட்கும், நல்லவராகவே வாழ்ந்தவர்‌ கேப்டன்‌ விஜயகாந்த் – அமீர் புகழஞ்சலி!!

திரையிலும், தரையிலும் நல்லவராகவே வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த் என இயக்குநர் அமீர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.


இயக்குநர் அமீர் புகழஞ்சலி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “ஏழைகளின்‌ தோழன்‌, எளியவர்களின்‌ பாதுகாவலன்‌, அநீதியைத்‌ தட்டிக்‌ கேட்கும்‌ துணிச்சல்காரர்‌ என்று நிஜ நாயகனாகவே வாழ்ந்த தே.மு.தி.க. தலைவர்‌ கேப்டன்‌ விஜயகாந்த்‌ அவர்களின்‌ மறைவு உண்மையிலேயே தமிழ்த்‌ திரையுலகுக்கும்‌, இந்திய அரசியலுக்கும்‌ ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்‌.

திரைப்படங்களில்‌ நல்லவர்களாக நடித்துக்‌ கொண்டிருக்கும்‌ நடிகர்களுக்கு மத்தியில்‌, திரையிலும்‌, தரையிலும்‌ நல்லவராகவே வாழ்ந்தவர்‌ கேப்டன்‌ விஜயகாந்த்‌. அவருடன்‌ மறுபடியும்‌ பேசி அளவளாவும்‌ வாய்ப்பு கிடைக்கும்‌ என்று நம்பிக்கையோடு இருந்த என்னை, அவரது இடர்‌ மறைவு, பேரதர்ச்சியிலும்‌, மீளாத்துயரிலும்‌ ஆழ்த்தியுள்ளது.

இன்றைய தினத்தில்‌ உச்ச நடிகராகவும்‌ இல்லாமல்‌, அரசியலில்‌ பெரும்‌ பதவியிலும்‌ இல்லாமல்‌ இருந்தாலும்‌ ஒட்டு மொத்த தமிழக மக்களின்‌ இதயத்திலும்‌ நீங்கா இடம்‌ பெற்றிருக்கும்‌, சாதி – மதம்‌ கடந்த மனிதநேயப்‌ பண்பாளர்‌, எங்களது “மண்ணின்‌ மைந்தன்‌” கேப்டன்‌ விஜயகாந்த்‌ அவர்களது ஆன்மா, இறைவன்‌ திருவடி நிழலில்‌ அமைதியடைய வேண்டுகிறேன்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply