சபரிமலை 18ம் படியில்  போட்டோ ஷூட் நடத்திய போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்…

சபரிமலை ;

சபரிமலை 18ம் படியில் குரூப் போட்டோ எடுத்த போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு சுவாமி தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.  

இந்த நிலையில், சபரிமலை 18ம் படியில் குரூப் போட்டோ எடுத்த போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சபரிமலையில் பாது காப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட போலீசார் ஏராளமானோர் சபரிமலை 18ம் படியில் நின்று குரூப் போட்டோ எடுத்தனர்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகிய நிலையில், கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அந்த காவலர்களுக்கு ஆயுதப்படை முகாமில் நன்னடத்தை பயிற்சி அளிக்க அம்மாநில டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். 

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *