நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!!

துபாய்:
நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “இது ஒரு தனித்துவமான ஆட்டம் மற்றும் தனித்துவமான முடிவு. ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியை நம் நாட்டுக்கு கொண்டு வந்த நமது கிரிக்கெட் அணியை நினைத்து பெருமை கொள்கிறேன். போட்டி முழுவதும் அற்புதமாக விளையாடியுள்ளனர். அற்புதமான ஆல்ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்திய நம் அணிக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் கூறும்போது, “இது ஒரு குறைபாடற்ற ஆட்டம், ஒரு கச்சிதமான முடிவு. சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கும், வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூஸிலாந்துக்கும் வாழ்த்துகள். ரோஹித் சர்மாவும் அவரது வீரர்களும் கடினமான சூழலில் சிறப்பாக செயல்பட்டு, சிறந்த ஆட்டத்தையும், இறுதியில் நிதானத்தையும் வெளிப்படுத்தி, போற்றத்தக்க ஒரு வெற்றியை பெற்றுத் தந்துள்ளனர். மீண்டும் ஒருமுறை சாம்பியன்ஸ்” என்று தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை 4 விக்கெட்டுகளில் வீழ்த்தியது இந்தியா. கேப்டன் ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக பேட் செய்தனர். இந்திய அணியின் வெற்றி ரன்களை ஜடேஜா எடுத்துக் கொடுத்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *