சபரிமலை;
நடிகர் மோகன்லால் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தார். சபரிமலை ஐயப்ப சுவாமியை தரிசிக்க நடிகர் மோகன்லால் நேற்று மாலை பம்பா கணபதி கோவிலுக்கு வந்த அங்கு அவருக்கு இருமுடி கட்டப்பட்டது.
அதன் பிறகு இருமுடி கட்டுடன் பம்பா கணபதி கோவிலில் இருந்து நீலிமலை அப்பாச்சி மேடு வழியாக சன்னிதானம் வந்தடைந்தார்.
அதன் பிறகு சன்னிதானத்தில் அவர் சுவாமி தரிசனம் செய்து இன்று காலை நெய் அபிஷேகத்தை முடித்துக் கொண்டு மீண்டும் அவர் சபரிமலையில் இருந்து புறப்பட உள்ளார்
தன்னுடைய புதிய படம் ரிலீஸ் ஆக இருக்க கூடிய நேரத்தில் சபரிமலைக்கு வந்த நடிகர் மோகன்லால் தன்னுடைய மனைவி பெயரிலும் நடிகர் மம்முட்டி பெயரிலும் சிறப்பு பூஜைகள் செய்துள்ளார் நீண்ட வருடங்களுக்குப் பிறகு நடிகர் மோகன்லால் சபரிமலை வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.