லண்டன்:
இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஜாஸ் பட்லர் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது அவரிடம், இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ் ஆகிய இருவரில் யார் சிறந்த கிரிக்கெட்டர் என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பட்லர், நான் காலிஸ் என சொல்லப் போகிறேன். காலிஸ் சிறந்த கிரிக்கெட் வீரர் என ரிக்கி பாண்டிங் நேரடியாக சொல்லியிருக்கிறார்.
அவரது சாதனைகளை ஒன்றாகச் சேர்த்தால் பேட்டிங்கில் சச்சினும், பந்துவீச்சில் ஜாகீர் கானும் விளையாடியதற்கு சமம்.
நீங்கள் ஒரு அணியைத் தேர்வு செய்ய முயற்சிக்கிறீர்கள் என்றால் அதில் அவரை தாண்டி பார்ப்பது மிகவும் கடினம் என தெரிவித்தார்.