சினிமாவில் அறிமுகமாகும் மோகன்லால் மகள் விஸ்மயா..!

சென்னை:
மலையான சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லால். இவரது மகள் விஸ்மயா. இவர் ஜூடு அந்தனி இயக்கும் “துடக்கம்” படத்தில் அறிமுகமாகிறார். ஆண்டனி பெரும்பாவூரின் ஆஷிர்வாத் சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இது ஆஷிர்வாத் சினிமாஸின் 37ஆவது படமாகும்.

“துடக்கம்” படத்தின் போஸ்டரை மோகன்லால சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். சினிமா போஸ்டரில் விஸ்மயா மோகன்லாலின் “துடக்கம்” என உள்ளது. இதன்மூலம் நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

தனது தந்தை மலையாள சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், நீண்ட காலமாக சினிமாவில் இருந்து விலகியிருந்தாலும் உலக கலைகளில் ஆர்வமிக்கவராக இருந்துள்ளார். ஓவியரும், எழுத்தருமான இவர், கிரைன்ஸ் ஆப் ஸ்டார்டஸ்ட் (Grains of Stardust) என்ற புத்தகத்தை கடந்த 2021ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.

தாய்லாந்தின் முக்கிய தற்காப்பு கலை மீது அதிக ஆர்வம் கொண்டு, பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். இவரது சகோதரர் பிரனவ் மோகன்லால் கடந்த 2018ஆம் ஆண்டு ஜீது ஜோசப் இயக்கிய ஆதி என்ன ஆக்ஷன் படம் மூலம் சினிமாத்துறையில் அறிமுகம் ஆனார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *