”வாரம் ஒரு தேவாரம்”!!

சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை ‘தேவாரம்’ என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.

தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது ‘தேவாரம்’ என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

பாடல்:-
நாமரு கேள்வியர் வேள்விஒவா

நான்மறை யோர்வழி பாடுசெய்ய

மாமரு வும்மணிக் கோயில்மேய

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

தேமரு பூம்பொழில் சேலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

காமரு சீர்மகிழ்ந்து எல்லிஆடும்

கணபதி ஈச்சரம் காமுறவே.

  • திருஞானசம்பந்தர்

விளக்கம்:-
நடுநிலை தவறாது கேள்வி ஞானத்தை உடையவர்களும், வேதங்களை கற்ற அந்தணர்களும் வழிபாடு செய்யும் பெருமை உடைய மணிக்கோவிலை கொண்டது திருமருகல்.

இங்கு எழுந்தருளி உள்ள இறைவனே! நல்ல மணம் தரும் மலர் சோலைகள் சூழ்ந்த சிறப்புமிக்க செங்காட்டங்குடியில் நடனம் புரியும் காட்சியை கணபதி ஈச்சரத்தில் விருப்பத்துடன் செய்வதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *