புதுடெல்லி,
நாடு முழுவதும் 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கிறது. அதன்படி, வீடுகளை கணக்கெடுக்கும்பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதியும், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி, 2027-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதியும் தொடங்குகிறது. அத்துடன், சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும்.
இதில் முதற்கட்ட கணக்கெடுப்புக்கான பயிற்சி (மாதிரி கணக்கெடுப்பு) அடுத்த மாதம் (நவம்பர்) 10 முதல் 30-ந்தேதி வரை நடக்கிறது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் இந்த மாதிரி கணக்கெடுப்பு நடைபெறும். இதில் உண்மையான கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் கேட்டு பதில்கள் பெறப்படும்.
இதற்கான அறிவிப்பை இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளர் மிருத்யுஞ்சய் குமார் நாராயணன் நேற்று வெளியிட்டார். முதல்முறையாக பொதுமக்களே தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ளும் வசதியும் இந்த முறை அறிமுகம் செய்யப்படுகிறது.
இவ்வாறு பெயர் சேர்ப்பதற்கான சோதனை நவம்பர் 1 முதல் 7-ந்தேதி வரை நடைபெறும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.