கார்த்திகை மாத பௌர்ணமி சிறப்புகள்…

ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் சில சிறப்புகள் உண்டு. அந்த வகையில் கார்த்திகை மாத பௌர்ணமி மிகவும் பிரசித்தி பெற்றது. சூரியன் விருச்சிக ராசியில் சஞ்சரிப்பார். அதற்கு ஏழாம் ராசியான ரிஷபத்தில் சந்திரன் உச்சநிலையில் இருப்பார்.

சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் சந்திக்கும் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளே திருக்கார்த்திகை யாகும்.சிவன் ஜோதி மயமாக விண்ணுக்கும் மண்ணுக்கும் நின்ற நாள். சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து தெறித்து விழுந்த 6 தீப்பொறிகளே கந்தனாகும்.

சிவனின் கண்களிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறியும் ஆறு ஆண் குழந்தையாக மாறியது.


அந்த ஆறு ஆண் குழந்தையும் கிருத்திகைகள் என்று அழைக்கப்பட்ட பெண்களால் வளர்க்கப்பட்டனர். அவரே முருகப்பெருமான் ஆவார்.

சிவனின் கண்களில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி என்பது நெருப்பை குறிப்பது. எனவேதான் திருக்கார்த்திகை அன்று அனைத்து வீடுகளிலும் வழிபாட்டு ஸ்தலங்களிலும் அகல் விளக்கு ஏற்றும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கார்த்திகை மாதத்தில், அகல் விளக்கேற்றி வழிபாடு செய்யும்போது, செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

ஏனெனில் விளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மாவும், தண்டு பாகத்தில் மகாவிஷ்ணுவும், நெய் அல்லது எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும், தீபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி தேவி, பார்வதி தேவி என முப்பெருந்தேவியர் வாசம் செய்வதாக ஐதீகம். கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபடுவது மேலும் சிறப்பை தரும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *