சிந்து நிலம் இந்​தி​யா​வின் ஒரு பகு​தி​யாக இல்​லாமல் இருக்​கலாம், ஆனால் நாகரிக ரீதி​யாக, சிந்து எப்​போதும் இந்​தி​யா​வின் ஒரு பகு​தி​யாகவே இருக்​கும் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!!

புதுடெல்லி:
மத்திய பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் கூறிய​தாவது: சிந்து நதிக்கு அரு​கிலுள்ள பகு​தி​யான சிந்து மாகாணம் 1947-ல் பிரி​வினைக்​குப் பிறகு பாகிஸ்​தானுக்கு சென்​றது. அந்த பகு​தி​யில் வாழ்ந்த சிந்தி மக்​கள் இந்​தி​யா​வுக்கு வந்​தனர்.

எல்​.கே. அத்​வானி போன்ற தலை​வர்​களின் தலை​முறையைச் சேர்ந்த சிந்தி இந்​துக்​கள், இந்​தி​யா​விலிருந்து சிந்து பகுதி பிரிவதை ஒரு​போதும் ஏற்​றுக்​கொள்​ள​வில்​லை.

சிந்து இந்​துக்​கள், குறிப்​பாக அவரது தலை​முறையைச் சேர்ந்​தவர்​கள் இன்​றும் சிந்து இந்​தி​யா​விலிருந்து பிரிந்​ததை ஏற்​றுக்​கொள்​ள​வில்லை என்று அத்​வானி தனது நூலில் எழு​தி​யதை குறிப்​பிட விரும்​பு கிறேன்.

சிந்​து​வில் மட்​டுமல்ல, இந்​தியா முழு​வதும், இந்​துக்​கள் சிந்து நதியை புனித​மாகக் கருதுகின்​றனர்.

இன்​று, சிந்து நிலம் இந்​தி​யா​வின் ஒரு பகு​தி​யாக இல்​லாமல் இருக்​கலாம், ஆனால் நாகரிக ரீதி​யாக, சிந்து எப்​போதும் இந்​தி​யா​வின் ஒரு பகு​தி​யாகவே இருக்​கும்.

நிலத்​தைப் பொறுத்​தவரை, எல்​லைகள் மாறக்​கூடும். யாருக்​குத் தெரி​யும், நாளை சிந்து மீண்​டும் இந்​தி​யா​வுக்​குத் திரும்​பலாம். இவ்​வாறு பாது​காப்பு அமைச்​சர் ராஜ்நாத் சிங் தெரி​வித்​தார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *