இபோ:
சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் மலேசியாவின் இபோ நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் நேற்று பெல்ஜியமுடன் மோதியது. இதில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
இந்திய அணி தரப்பில் அபிஷேக் (33-வது நிமிடம்), ஷில்லானந்த் லக்ரா (57-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். அர்ஜெண்டினா அணி சார்பில் ரோவ்மன் 2 கோல்களும் (17, 57-வது நிமிடங்கள்), நிக்கோலஸ் (45-வது நிமிடம்) ஒரு கோலும் அடித்தனர்.