சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் சேப்பாக்கத்தில் நடந்தது.
இந்த போட்டியில் இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ஆடினார். அப்போது அவரது ஆட்டத்தின் போது ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆரவார கோஷமிட்டனர்.ஆனாலும் பஞ்சாப் அணி இந்த போட்டியில் எளிதாக வென்றது.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த 103 வயது ராம்தாஸ் என்பவர் தோனியின் தீவிர கிரிக்கெட் ரசிகர். இவர் தோனி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியை தவறாமால் பார்த்து ரசிப்பார்.
தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி ஆட்டத்தை பார்த்து ரசித்துள்ளார். இது பற்றி கேள்விபட்ட தோனி 103 வயதான அந்த ரசிகரைநேரில் சந்தித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
மேலும் அந்த ரசிகருக்கு தனது கையொப்பமிட்ட சிறப்பு பரிசாக ஜெர்சி சட்டை ஒன்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

எம்.எஸ்.தோனி 103 வயது ரசிகருக்கு சிறப்பு பரிசு வழங்கிய வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ரசிகர்கள் தோனியை பாராட்டி வருகிறார்கள்