துபாய்:
ஆப்கானிஸ்தான் – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இரவு துபாயில் நடைபெற்றது.
முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக டார்விஷ் ரசூலி 39 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 68 ரன்களும், செதியுல்லா டேல் 42 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 53 ரன்களும் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் மேத்யூ ஃபோர்டு 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.
190 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 18.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக கேப்டன் பிரண்டன் கிங் 50, ஷிம்ரன் ஹெட்மயர் 46 ரன்கள் சேர்த்தனர். 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது.
முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.
மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்!