தமிழகத்​தில் முதல்​வரின் விரி​வான காப்​பீட்​டுத் திட்​டத்​தில் விநி​யோகித்த டயாலிசிஸ் திர​வப் பை திடீரென நிறுத்​தப்​பட்​ட​தால் சிஏபிடி நோயாளி​கள் கடும் பாதிப்​பு!!

சிவகங்கை:
தமிழகத்​தில் முதல்​வரின் விரி​வான காப்​பீட்​டுத் திட்​டத்​தில் விநி​யோகித்த டயாலிசிஸ் திர​வப் பை திடீரென நிறுத்​தப்​பட்​ட​தால் சிஏபிடி நோயாளி​கள் கடும் பாதிப்​புக்​குள்​ளாகினர்.

தமிழகத்​தில் கடந்த சில ஆண்​டு​களாக சிறுநீரகம் பாதிக்​கப்​பட்​டோரின் எண்​ணிக்கை அதி​கரித்​துள்​ளது.

பாதிக்​கப்​பட்​டோர் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வ​மனை​களில் முதல்​வரின் விரி​வான காப்​பீட்​டுத் திட்​டத்​தில் இயந்​திரங்​களில் டயாலிசிஸ் செய்து கொள்​கின்​றனர்.

மருத்​து​வ​மனை​களுக்​குச் செல்ல முடி​யாதோர் இயந்​திரமின்றி வீடு, அலு​வல​கங்​களில் இருந்​த​படியே ‘தொடர்ச்​சி​யான நடமாடும் பெரிட்​டோனியல் டயாலிசிஸ்’ (சிஏபிடி) என்ற முறை​யில் டயாலிசிஸ் செய்து கொள்​கின்​றனர்.

இந்த முறை​யில் சிகிச்சை பெற டயாலிசிஸ் திர​வம் தேவைப்​படு​கிறது.

இந்த திர​வப் பையை வயிற்​றில் குழாய் மூலம் பொருத்​தி​னால் போதும், ஈர்ப்பு விசை மூலம் திர​வம் உடலுக்​குள் சென்று டயாலிசிஸ் செய்​யப்​படு​கிறது.

இந்த சிகிச்சை பெறு​வோர் தங்​களது அன்​றாடப் பணி​களை செய்ய முடி​யும்.

இந்த முறை​யில் தமிழகம் முழு​வதும் சிறு​வர்​கள் முதல் முதி​யோர் வரை பல ஆயிரம் பேர் டயாலிசிஸ் செய்​கின்​றனர்.

இதில், நாளொன்​றுக்கு குறைந்​தது 3 முறை டயாலிசிஸ் செய்ய வேண்​டும்.

ஒவ்​வொரு முறை​யும் டயாலிசிஸ் திர​வப் பையை மாற்ற வேண்​டும். இந்​தத் திர​வப் பையை முதல்​வரின் விரி​வான மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்​டத்​தில் மக்​களைத் தேடி மருத்​து​வம் மூலம் நோயாளி​களின் வீடு​களுக்கே வழங்​கப்​பட்டு வந்​தது.

கடந்த ஏப்​ரல் மாதத்​திலிருந்து திர​வப் பை விநி​யோகம் நிறுத்​தப்​பட்​டது. இதனால், சிஏபிடி நோயாளி​கள் கடும் பாதிப்​புக்​குள்​ளாகி உள்​ளனர்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்​டம், ஜெய​கொண்​டானைச் சேர்ந்த பூவ​ராகவன் கூறிய​தாவது: 83 வயதான எனது தாயார் சிஏபிடி முறை​யில் டயாலிசிஸ் செய்து கொள்​கிறார்.

அவருக்கு முதல்​வரின் விரி​வான மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்​டத்​தில் தலா 6 டயாலிசிஸ் திர​வப் பைகள் உள்ள 15 பெட்​டிகளை மாதந்​தோறும் வழங்​கினர். கடந்த 3 மாதங்​களாக நிறுத்​தி​விட்​டனர்.

இதுகுறித்து அரசு மருத்​து​வ​மனை​களில் கேட்​டால் தமிழகம் முழு​வதும் நிறுத்தி விட்​ட​தாகக் கூறுகின்​றனர். சிஏபிடி முறையை மேற்​கொண்​டோருக்கு இயந்​திரம் மூலம் டயாலிசிஸ் செய்ய முடி​யாது.

ஒரு திர​வப் பை ரூ.305 என்​ப​தால், தின​மும் ரூ.915 தேவைப்​படு​கிறது. இதனால் மிகுந்த சிரமத்​துக்​குள்​ளாகி வரு​கிறோம்.

மீண்​டும் டயாலிசிஸ் திர​வப் பையை விநி​யோகிக்க தமிழக முதல்​வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *