பட்டுக்கோட்டை ;
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே நடைபெற்ற விழாவில் இன்று பங்கேற்றார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என்னைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பது மக்கள் தான். மக்களவைத் தேர்தலுக்குப் பின் மூன்று அணிகளாக உள்ள அதிமுக ஓரணியில் சேர வாய்ப்புள்ளது என்பது எனது அனுமானம். அப்போது அதிமுகவின் பலம் என்ன என்பது அனைவருக்கும் புரியும்.
2026 சட்டப்பேரவை தேர்தல் என்பது எங்களுக்கும், திமுகவுக்கும் நேரடிப் போட்டியாக இருக்கும். அப்போது நான் யார் என்பதை காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன். மக்களவைத் தேர்தலில் யார் மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வரவேண்டும் என்பதை சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.

இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்திருப்பது அதிமுகவின் பங்காளி சண்டை. வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தலில் அவர் அதிமுக வேட்பாளராகவே போட்டியிடுவார். அந்த தேர்தலில் அதிமுக ஓரணியில் இணைந்து வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பில் அமரும்” என்று தெரிவித்துள்ளார்.