சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதில் பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினரை கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்துவது, இணையதள இணைப்பை துண்டிப்பது, மெட்ரோ ரயில் நிலையங்களை மூடுவது என வேண்டாத வேலைகளையெல்லாம் பிரதமர் மோடி செய்துகொண்டிருக்கிறார்.
தர்மேந்திர பிரதான் என்கிற ஒரு அமைச்சரை நீக்குவதால் அவரது அரசு கவிழ்ந்து விட போகிறதா என்ன?
எனவே, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்கி நாடு முழுவதும் நடந்துவரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.