கரூர்:
கரூர் சமூக நீதி விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவது குறித்து வீடியோ வெளியிட்ட மாணவர்களுடன் அமைச்சர் வன்னி அரசு வீடியோ காலில் அழைத்து பேசி அவர்களது தேவைகளை கேட்டறிந்தார்.
கரூர் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள அரசு சமூக நீதி விடுதியில் கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் பயிலும் 105 மாணவர்கள் தங்கியுள்ளனர்.
விடுதியில் வழங்கப்படும் உணவு தரமற்ற முறையில் உள்ளதாகக் கூறி மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் நேற்று வீடியோ வெளியிட்டனர்.
அதில், கரூர் காந்திகிராமம் பகுதியில் உள்ள சமூக நீதி விடுதியில் (பட்டியலின மாணவர் விடுதி) வழங்கப்படும் உணவு சாப்பிட முடியாத வகையில் மோசமாக உள்ளதாகவும், சமூக நீதி அமைச்சர் வன்னி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தகவலை டைப் செய்து வீடியோவுடன் பதிவிட்டிருந்தனர்.
இதையடுத்து ஆதிதிராவிட நலத்துறை இயக்குநர் செந்தில்ராஜ், கரூர் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் எஸ்.பிரகாஷ், விடுதி காப்பாளர் ஆகியோரிடம் நேற்று விசாரணை நடத்தினார்.
மேலும், சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு வீடியோ வெளியிட்ட மாணவர்களை வீடியோ கால் மூலம் அழைத்து தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
மாணவர்களின் தேவையை உடனடியாக சரி செய்து தீர்வு காணும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக சமூக நீதி அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து கரூர் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் எஸ்.பிரகாஷ் கூறும்போது, “ஆதிதிராவிட நலத்துறை இயக்குநர் செந்தில்ராஜ் இது குறித்து கேட்டறிந்தார். அமைச்சர் வன்னி அரசு மாணவர்களிடம் வீடியோ காலில் அழைத்து பேசியுள்ளார்.
விடுதிகளில் மீறும் உணவு மறுநாள் டிஸ்போஸ் செய்யப்பட்டு வந்தது. இனி மாவட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகளிலும் மீறும் உணவுகளை உடனடியாக அப்போதே டிஎஸ்போஸ் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.